சேலம், டிச.12- நூறு நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தக்கோரி விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆட் டையாம்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகள் பேரூராட்சிப் பகுதிகள் உள்ளிட்ட சிறு நகரங்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டத்தை உடனடியாக துவங்கிட வேண்டும். வேலை உறுதி திட் டத்தை 200 வேலை நாட்களாகவும், தினக்கூலி யாக ரூ.600 ஆகவும் வழங்கிட வேண்டும். கொரோனா கால நிவாரணமாக குடும்பத் திற்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டையாம் பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் சேலம் தாலுகா செயலாளர் கே.எஸ்.பழனிசாமி, பன மரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ஜி.கணபதி, துணைச் செயலாளர் சின் ராஜ், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் டி.பர மேஸ்வரி, சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகி முத்துசாமி உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.