districts

img

25 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலில் வெற்றி பெற்ற செல்வகணபதி!

சேலம், ஜூன் 5- சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி வெற்றி பெற்றதன் மூலம், கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலில் வெற்றியடைந்துள்ளார். சேலம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக சார்பில்  ப.விக்னேஷ், பாஜக கூட்டணியின் பாமக சார்பில் என்.அண்ணாதுரை, நாம்  தமிழர் கட்சி சார்பில் மனோஜ்குமார், சுயேச்சைகள் உட்பட மொத்தம் 25 வேட் பாளா்கள் போட்டியிட்டனர்.

சேலம் மக் களவைத் தொகுதிக்கான வாக்குப்ப திவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற் றது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி  செவ்வாயன்று காலை 8 மணிக்கு கருப் பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத் தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண் ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலு வலர், வேட்பாளர்கள், முகவர்கள் முன் னிலையில் தொடங்கியது.

முதலில் சேலம் மக்களவைத் தொகுதியில் பதி வான 10,755 தபால் வாக்குகள் எண்ணப் பட்டன. தொடர்ந்து, தொகுதி வாரியாக  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்க ளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட் டன. அதிகபட்சமாக ஓமலூர் தொகுதி யில் பதிவான வாக்குகள் 25 சுற்றுக ளும், எடப்பாடி தொகுதி வாக்குகள் 23  சுற்றுகளும், சேலம் மேற்கு தொகுதி வாக்குகள் 22 சுற்றுகளும், சேலம் வடக்கு தொகுதி வாக்குகள் 19 சுற்றுக ளும், சேலம் தெற்கு தொகுதி வாக்குகள்  18 சுற்றுகளும், வீரபாண்டி தொகுதி  வாக்குகள் 22 சுற்றுகளும் என மொத்தம்  129 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் டி.எம்.செல்வ கணபதி முன்னிலை வகித்து வந்தார். ஒவ்வொரு சுற்றிலும், டி.எம்.செல்வ கணபதி சுமார் 4 ஆயிரம் வாக்குகள் கூடு தலாகப் பெற்று வந்த நிலையில், இறுதி யில் டி.எம்.செல்வகணபதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட் பாளர் ப.விக்னேஷை 70,357 வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தபால் வாக்குகளில் டி.எம்.செல்வகண பதி 4,063 வாக்குகளும், விக்னேஷ் 2,770  வாக்குகளும், அண்ணாதுரை 1310 வாக் குகளும், மனோஜ்குமார் 571 வாக்குக ளும் பெற்றனர். சேலம் மக்களவைத்  தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட் பாளர் டி.எம்.செல்வகணபதியிடம், அதற்கான சான்றிதழை மாவட்ட தேர் தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. பிருந்தாதேவி, பொதுப் பார்வையாளர்  ஜி.பி.பாட்டீல் ஆகியோர் வழங்கினர். அப்போது, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சிபிஎம் மாவட் டச் செயலாளர் மேவை.சண்முகராஜா,  சிபிஐ மாவட்டச் செயலாளர் இ.எ. மோகன், காங்கிரஸ் மாநகர் மாவட்டத்  தலைவர் பாஸ்கர் உட்பட பலர் உடனி ருந்தனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு தேர்த லில் வெற்றி பெற்ற டி.எம்.செல்வக ணபதி, வழக்கு விசாரணைக்காக அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் அவர்  போட்டியிடவில்லை. 25 ஆண்டுகளுக் குப் பிறகு மீண்டும் திமுக சார்பில் சேலம்  நாடாளுமன்ற தொகுதியில், இந்திய  கூட்டணி ஆதரவுடன் தேர்தலை சந்தித்த  அவர், 70,357 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;