சேலம், டிச.10- சேலத்தில் நில கிரயத் திற்கு ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட் சியரை லஞ்ச ஒழிப்பு துறை யினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், தாத காப்பட்டி பகுதியைச் சேர்ந் தவர் நிஷாந்த்(24). இவர் திருச்செங்கோடு வடகுராம் பட்டி கிராமத்தில் வாங்கிய 1.18 ஏக்கர் நிலத்தை பத்திரப் பதிவு செய்ய,சேலம் தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த துணை வட்டாட்சியர் ஜீவானந்தம் (41) நில கிரயத்திற்கு சொத்து மதிப்பை குறைத்து காட்ட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக நிஷாந்த் லஞ்ச ஒழிப்பு காவல் துறையி னருக்கு தகவல் தெரிவித் தார். இதன்பின்னர், சேலம் காந்திரோடு பகுதிக்கு ஜீவா னந்தத்தை வரவைத்து லஞ்ச பணத்தை வழங்கும்போது, லஞ்ச ஒழிப்புத்துறை ஆய் வாளர் சந்திரசேகர் தலைமை யிலான காவலர்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, ஜீவானந்தத்தைக் கைது செய்து மேற் கொண்டு விசாரணையை நடத்தி வரு கின்றனர்.