districts

img

வாலிபர் சங்கம் ரத்த தான முகாம்

திருவண்ணாமலை, ஆக.24- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்ததான கழகம் சார்பில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.  வட்டார செயலாளர் சேதுராமன் தலைமையில், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் துவக்கி வைத்தார்.  வட்டார தலைமை மருத்துவர் சிலம்பரசன், பார் அசோசியேஷன் செயலாளர் சி.முருகன் , முன்னாள் மாவட்டச் செயலாளர் லட்சுமணன், மாவட்டச் செயலாளர் சி.எம்.பிரகாஷ் மாவட்டத் தலைவர் முருகன் கல்வியாளர் மாணிக்கம், பேரூராட்சி 5 ஆவது கவுன்சிலர் ஜாபீர் பாஷா , காங்கிரஸ் நகர செயலாளர் ஆசை மூசீர்,  இரத்ததான கழகம் மாவட்ட அமைப்பாளர் எழில்வாணன்,  மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.