சென்னை, அக்,29- உலக பக்கவாத தினத்தையொட்டி பக்கவாத நோய் வராமல் தடுப்பது குறித்த 4 நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னையில் உள்ள பிரசாந்த் மருத்து வமனை நடத்தியது. உலக பக்கவாத தினம் அக்டோபர் 29–ந்தேதி கடை பிடிக்கப்பட்ட நிலையில் ‘நாம் ஒன்றிணைந்தால் பக்க வாதத்தைவிட வலிமைமிக்கவர்கள்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மாதவரம், புழல், அண்ணாநகர், அம்பத்தூர், பெரம்பூர் மற்றும் ஷெனாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்று பக்கவாதம் குறித்த பல்வேறு விஷயங்களை அறிந்து கொண்டனர். பல்வேறு விதமான பக்கவாத நோய்கள் வராமல் தடுப்பதற்கும், வந்தவர்கள் அதை திறம்பட கையாள்வதற்கும் பிரசாந்த் மருத்துவமனைnபுதுமையான முறைகள் மற்றும் அது சம்பந்தமான கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உறுதி எடுத்துள்ளனர்.