கடலூர், மார்ச் 16- வெறுப்பு அரசியலை வேரறுப்போம் பெண்களின் ஜனநாயக உரிமைகளை பாது காப்போம் என்று வலியுறுத்தி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பல்வேறு சங்கங்க ளின் சார்பில் மகளிர் தின திறந்தவெளி கருத்தரங்கம் புதனன்று நடைபெற்றது. ஜனநாயக மாதர் சங்கம், அனைத்து குடி யிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்திற்கு மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.மல்லிகா தலைமை தாங்கினார். மாதர் சங்க நிர்வாகிகள் பி.தேன் மொழி, எம். ஜெயசித்ரா, கே.அன்பு செல்வி, பி.முத்துலட்சுமி, எஸ்.ரேவதி, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கோதை மோகன், கலைச்செல்வி, ஏ. மாலதி, ஜி.சிவசங்கரி, எஸ். ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.மாதவி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் வி.மேரி துவக்க உரை யாற்றினார். அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி, மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டீனா, மாநில பொருளாளர் ஜி. பிரமிளா ஆகியோர் கருத்துரையாற்றினர். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் வத்சலாரமணி, ஜெயஸ்ரீ ரகுராமன், சற்குணவதி கனக சபை, சௌமியா, நாக லட்சுமி, கேத்தரின், சாந்தகுமாரி ஆகியோர் பேசினர்.