districts

img

தமிழகத்தின் நுழைவு வாயில் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் மேம்படுமா பெ.ரூபன்

திருவள்ளூர், ஜூலை 2-

    ஆந்திர மாநில எல்லை ஓரம் அமைந்துள்ளது ஆரம்பாக்கம் ஊராட்சி. இங்கு  20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மீன் பிடித்தல், விவ சாயம் இவர்களுடைய பிரதான தொழி லாகும்.

    ஆரம்பாக்கம் பஜாரை மையப்படுத்தி பெத்தானியா குப்பம், நொச்சி கும்பம், பாட்டகுப்பம், பீமார்பாளையம் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களும், விவசாயம் மற்றும் விவசாய தொழிலாளர்களை அடிப்படை யாக கொண்டு தோக்கமூர், எகுமதுரை, பூவலை ஆகிய ஊராட்சிகள் இயங்கி வரு கிறது. ஆரம்பாக்கத்தையொட்டி கடல், அதனை சார்ந்து உவர் நீர் ஏரி உள்ளது. இதனை நம்பி மீன் பிடி தொழிலில் ஆயி ரக்கணக்கான மீனவர்கள் ஈடுபட்டு வரு கின்றனர். இங்குள்ள இருக்கம் என்ற கிராமத்தின் இயற்கை எழில்கொஞ்சம் பகுதிக்கு படகு மூலம் சவாரி செய்து ஏராள மான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களை கழித்து மகிழ்ச்சியோடு செல்கின்ற னர். இங்கு விதவிதமான பல அரிய பறவை களை காண முடியும்.

மேம்படுத்தப்பட்ட  மருத்துவமனை தேவை

   ஆரம்பாக்கம் தமிழ்நாட்டின் கடைசி எல்லை பகுதி என்பதால்,  பல அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் இங்கிருந்து தான் தங்களது பிரச்சார பயணத்தை துவங்குவார்கள். பிரச்சாரத்தின் போது மீனவ கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவோம், ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால் எதையும் இதுநாள் வரை நிறைவேற்றவில்லை. இப்பகுதியை சுற்றி மீனவர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிப்பதால், மக்கள் தொகைக்கு ஏற்ப  ஆரம்ப சுகாதார நிலையத்தை  மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும். அவசர வாகன ஊர்தி (ஆம்புலன்ஸ்)வசதி, சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும். கூடுதல் மருத்துவர்களை நியமித்தது, அனைத்து வகையான மருந்து, மாத்திரை களுடன் கூடிய,  24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையாக கொண்டு வர அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

 மீன் பிடி தடை கால நிவாரணத்தை உயர்த்துக

    மீன்கள் இன விருத்திக்காக ஆண்டு தோறும் மீன் பிடி தடை காலம் கொண்டு வரப்படுகிறது. தற்போது 61 நாட்க ளாக உயர்த்தியுள்ளனர். இதனால் மீனவர்க ளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப் படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கேரளம் மற்றும் புதுச்சேரி அரசுகளை போல,  தடை காலத்தின் போது ரூ.12 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும், வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செயற்கை கோள்கள் ஏவும் போதெல்லாம்  கடலுக்கும், ஏரிக்கும் தொழில் செய்ய போகக்கூடாது என ஒன்றிய அரசு உத்தரவு போடு கிறது. இப்படி ஆண்டுக்கு பல நாட்கள் தொழில் செய்ய முடியாத காலங்களில் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைத்திடுக

    ஆரம்பாக்கம் பகுதியில்  நெல் மற்றும் மா விளைச்சல் அதிகமாக காணப்படுகிறது. விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும்  நிலத்தடி நீர் மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய அருகில் உள்ள ஏரி, குளங்களை பாதுகாக்க வேண்டும், அதனை தூர்வாரி கரை களை பலப்படுத்த வேண்டும், உரம், பூச்சி மருந்துகள் விலை கடு மையாக உயர்ந்துள்ள நிலையில், விவ சாயிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இங்கு மா விளைச்சல் அதிகம் உள்ளதால் இந்த பகுதியில் மாம்பழம் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த னர். இந்த சூழலில் ஆட்சிக்கு வந்தால் ஆரம்பாக்கத்தில் மாம்பழம் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என திமுக சட்ட மன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்த ராஜன் வாக்குறுதி அளித்தார். அதனை நிறைவேற்றினால், விவசாயிகள் வளம் பெறுவார்கள். வேலைவாய்ப்பு கிடைக்கும்.  

சிபிஎம் வேண்டுகோள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், வட்டக் குழு உறுப்பினர்கள் டி.கோபாலகிருஷ்ணன்,  முகமது சாலி, இரஹிமா, கிளை செயலாளர் கபீர் பாஷா, நல்லம்மாள் சுபேதா,  ஆகியோர் கூறும் போது, மீனவர்களுக்கு சேமிப்பு நிவார ணம் வழங்க வேண்டும்,  தடை கால நிவாரணம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், எம்.ஆர்.கண்டிகையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழு தடைந்துள்ளது. உடனடியாக புதிய நீர் தேக்க தொட்டியை கட்டி கொடுக்க வேண்டும். அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த பிறகும் திறக்கப்படவில்லை. இதனை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு களை உருவாக்கும் வகையில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரிட்டன் டிக்கெட் வழங்க வேண்டும், உதவி மின் பொறியாளர் உள்ளிட்ட ஊழியர்களை நியமிக்க வேண்டும், மாவட்ட தலைநகரம் திரு வள்ளூர் செல்ல ஏற்கெனவே இயங்கி வந்த தடம் எண் 173 விழுப்புரம் கோட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  

    தமிழகத்தின் நுழைவு வாயிலில் உள்ள ஆரம்பாக்கத்தின் மக்களின் நியாயமான கோரிக்கைகளை மாநில அரசு நிறை வேற்றவேண்டும் என்று மக்கள்  வலியுறுத்தி யுள்ளனர். - பெ.ரூபன்

;