districts

பழம்பெருமை மீட்டெடுக்குமா ஆரணி நகரம் பெ.ரூபன்

    திருவள்ளூர் மாவட்டத்தில், ஆரணி பழம்பெருமை வாய்ந்த நகரம். இங்கு கைத்தறி நெசவுக்கு மட்டுமல்ல, காய்கறி வகை கள், அனைத்து வகையான கீரை வகைகள், பழம், பூ விவசாயத்திலும் பெயர்பெற்றது.  ஆரணியை சுற்றியுள்ள கிராமங்களில் விளையக் கூடிய காய் கறிகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து மினி கோயம்பேடு என்று அழைக்கப்படும் ஆரணி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து  வருகின்றனர்.  

    விவசாயிகளுக்கு, பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும்  போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மிகவும் அவதிப்படுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக இங்கு ஒரு பேருந்து நிலையம் வேண்டும் என   வலியுறுத்தப்பட்டு வருகிறது.

காவலாளியாக மாறிய நெசவாளி

      ஆரணியில் 1998 ஆம் ஆண்டுக்கு முன்பு  கைத்தறி நெசவு தொழில் வளமாக இருந்தது.  கொசவன்பேட்டை, கள்ளிக்குப்பம், சின்னம் பேடு பேட்டை என சுற்றுவட்டார கிராமங் களில் கைத்தறியில் பாலி காட்டன், சில்க் காட்டன் ஆகிய இரண்டு ரகங்களை  நெசவு செய்து, தொழில் தொய்வின்றி நடைபெற்றது. ஒன்றிய அரசின் புதிய பொருளாதார கொள்கை  யால் பாவு நூல், கைத்தறிக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் அனைத்தும் ஜிஎஸ்டி வரியால் கடுமையான விலை உயர்வால் தொழில் பாதிக்கப்பட்டது.

    பாரம்பரியமிக்க நெசவு தொழில் வேகமாக  அழிந்து வரும் நிலையில் கடன் பெற்று பிள்ளைகளை படிக்க வைத்தும், அவர்க ளுக்கு சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை கிடைக்கவில்லை. இதனால் ஒட்டுமொத்த குடும்பமே வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது.

    வேறு வேலை தெரியாத கைத்தறி நெசவாளர் கள்,  300 கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த  வீடு இல்லாமல், வாடகை வீட்டில் குடியிருக்கும் வயதானவர்கள் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த குடும்பங்க ளுக்கு அரசு இலவச குடிமனை,  பட்டா வழங்கி னால் சொந்தமாக கைத்தறி அமைத்து படிப்படி யாக முன்னேற முடியும் என்கிறார்கள்.

குப்பையும் - மதுபானக் கடையும்

      ஆரணி எல்லைக்குள் நுழைந்தால் கிழக்கே  அரசு மதுபானக் கடையும், மேற்கே மலை போல  குவிந்துள்ள குப்பைகள் தான் நம்மை வரவேற்கி றது. ஆரணி பேரூராட்சியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், ஆரணி பஜார் நடுவில், பள்ளி, கோயில் அருகில் அரசு மதுபானக்  கடை உள்ளது. இந்த மதுபானக் கடையை கடந்து  500 மீட்டரில் தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதை கடந்து தான் மாணவி கள் பள்ளிக்கு செல்ல வேண்டும். இதனால் மாண வர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம்.  

    ஏற்கெனவே ஆரணி எல்லையில் ஒரு டாஸ்மாக் இருக்கும் போது பஜார் நடுவில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என  அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்ற னர்.பொன்னேரி கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் என எல்லோரும் மனு அளித்தும் மதுபானக் கடையை அகற்ற வில்லை என பொதுமக்கள் குமுறுகின்றனர்.

 மன உளச்சலில் மருத்துவர்

     கைத்தறி கூட்டுறவு சொசைட்டிக்கு சொந்தமான இடத்தில் தான் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஆரணி பேரூராட்சியில் இருக்கும் 15 வார்டுகளில் உள்ளவர்கள் மட்டுமன்றி  அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் இங்கு வந்து மருத்துவம் பார்க்கின்றனர்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒரு மருத்து வர், ஒரு செவிலியர் மட்டுமே பணிபுரிகின்ற னர். நாள் ஒன்றுக்கு 300 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருவதால்,  தேநீர் அருந்த  கூட நேரமில்லாமல் பணி செய்ய வேண்டி யுள்ளது என்கிறார்கள். ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் டெஸ்ட் எடுப்பது, பிரசவம் பார்ப்பது,  மருத்து மாத்திரைகள் வழங்குவது என எல்லா  பணிகளையும் ஒரே செவிலியர் மட்டுமே செய்ய  வேண்டிய அவல நிலை உள்ளது. கூடுதலாக  மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்து  24 மணி நேரம் இயங்கும் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பைகளை அகற்ற அதிகாரி உறுதி

     ஆரணி பேரூராட்சியின் செயல் அலுவலர் கலாதரன் கேட்ட போது, பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு ஆனவுடன் அதற்கான பணிகள் நடைபெறும். மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பைகளை மறுசுழற்சி செய்து தரம் பிரித்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

      ஆரணி பகுதியில் குவிந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் இந்த ஆட்சியில் களையப்படும் என்று நம்புவதாகவும்  இந்த நியாயமான கோரிக் கையை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பணியை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மேற்கொண்டு வருவதாகவும்  மாவட்ட குழு உறுப்பினர் இ.தவமணி, பொன்னேரி பகுதி குழு செயலாளர் எஸ்.இ. சேகர், ெஜ.கே.தனஞ் செழியன், கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ஜி.செல்வராஜ், மாவட்ட செயலாளர் கே.சந்திரைய்யா, பொருளாளர் கே.ஈஸ்வரைய்யா, மாவட்ட துணைச் செயலாளர் வீ.முனியம்மா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.  - பெ.ரூபன்