விழுப்புரம், ஏப்.1- விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் ஞாயிறன்று நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி,மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு இப்தார் நோன்பு கஞ்சி குடித்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் முஸ்லிம் மக்களிடையே இந்தியா கூட்டணி சார்பில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாருக்கு பானை சின்னத்தில் வாக்களித்து பெருவாரி யான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என அமைச்சர் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் கேட்டுக் கொண்டனர். பிரச்சாரத்தில் சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மனித நேய மக்கள் கட்சியின் எம்எல்ஏ அப்துல் ஹமீது, திமுக எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன், நகர செயலாளர் சர்க்கரை, விசிக மாவட்ட செயலாளர் பெரியார் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.