வேலூர், மே 4 - விஐடி பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில்(2024) பி.டெக் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் இடத்தை அரியானாவை சேர்ந்த ரூபிந்தர் சிங், 2ம் இடத்தை ராஜஸ்தானை சேர்ந்த் பானு மகேஷ் செக்குரி, 3ம் இடத்தை ஆந்திராவை சேர்ந்த A.வேதாந்த் , 4ம் இடத்தை அசாமை சேர்ந்த ஆயுசி பெய்த்,5ம் இடத்தை உத்திரபிரதேசத்தை சேர்ந்தசன்வி சிங்க், 6ம் இடத்தை மகாராஷ்ட்டிராவை சேர்ந்த அபிராஜ் ராம்காந்த் யாதவ், 7ம் இடத்தை உத்திரகாண்டை சேர்ந்த சைதன்யா ரமேஷ் போஷ்ரே,8ம் இடத்தை உத்திரபிரதேசத்தை சேர்ந்த விக்கி குமார் சிங், 9ம் இடத்தை இமாச்சல பிரதே சத்ததை சேர்ந்த சோகன் ஹஸ்ரா, 10ம் இடத்தை பீகாரை சேர்ந்த சாகில் ஆகி யோர் பிடித்தனர். விஐடியின் நுழைவுத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ரேங்க் 1லட்சம் வரை எடுத்த மாணவ, மாணவிகள் விஐடி வேலூர், சென்னை, ஆந்திர பிரதேசம், போபால் ஆகிய 4 வளாகங்களில் மாணவ, மாணவிகள் தங்களுக்கான பாடப் பிரிவுகளை தேர்வு (ரேங்க் அடிப்படை யில்) செய்து கொள்ளலாம். முதல் கட்ட கலந்தாய்வு ( 07-5-2024 - 10-05-2024) ரேங்க் 1 முதல் 20,000 வரை, இரண்டாம் கட்ட கலந்தாய்வு ( 18-5-2024 - 21-5-2024 ) ரேங்க் 20,001 முதல் 45,000, மூன்றாம் கட்ட கலந்தாய்வு ( 29-5-2024 - 01-6-2024 ) ரேங்க் 45,001 முதல் 70,000, நான்காம் கட்ட கலந்தாய்வு ( 09-6-2024 - 12-6-2024 ) ரேங்க் 70,001 முதல் 1,00,000 நடைபெறும்.ரேங்க் 1,00,000 மேல் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு விஐடி ஆந்திரபிரதேசம் மற்றும் விஐடி போபாலில் மட்டுமே இடம் கிடைக்கும் . இவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு (20-06-2024 மற்றும் 23-06-2024) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும். மாணவ, மாணவியர்களுக்கான வகுப்புகள் ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்கும். ஜிவி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு கல்வி உதவி விஐடி பல்கலைக் கழகத்தின் ஜிவி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விஐடி நுழைவுத்தேர்வில் 1 முதல் 10 ரேங்குக்குள் தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு பி.டெக் படிப்பு பயிலும் 4 ஆண்டுகள் முழுவதும் 100 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 11 முதல் 50 ரேங்குக்குள் தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு75 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 51 முதல் 100 ரேங்குக்குள் தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு 50 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 101 முதல் 500 ரேங்குக்குள் தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு 25 சதவீத படிப்பு கட்டண சலுகையும் 4 ஆண்டுகள் முழுவதும் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் +2 தேர்வில் அரசு பள்ளியில் முதலிடம் பெறும் கிராமப்புற மாணவ, மாணவியருக்கு 100 சதவீத படிப்பு கட்டண சலுகையுடன் அவர்க ளுக்கு உணவு மற்றும் விடுதி வசதியுடன் விஐடி பல்கலைக்கழகத்தில் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது. 3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகள், 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகள் B.Sc.,அக்ரி, B. Arch., B.Des (Industrial Design) மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கான ( Integrated Programmes ) விண்ணப்பங்களை விஐடி இணையதளம் www.vit.ac.in வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.