வேலூர், செப்.30 - விஐடி பல்கலைக்கழகத்தில் ‘கிரா விடாஸ் 2024 அறிவுசார் தொழில் நுட்ப திருவிழாவின் நிறைவு விழாவிற்கு வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் வடகிழக்கு மாநிலங்களின் தொழில் மையத்தின் (நெக்டார்) தலைமை பொது இயக்குநர் அருண் குமார் சர்மா பங்கேற்றார்.கவுரவ விருந்தினராக அல்டியம் இந்தியா சாப்ட்வேர் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் தமன்னா மற்றும் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.இப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகையும், சான்றும் வழங்கப்பட்டது.