districts

img

விஐடி- ஸ்விங் ஸ்டெட்டர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

வேலூர், செப். 8- விஐடி பல்கலைக்கழகம் மற்றும் ஸ்விங்  ஸ்டெட்டர் இந்திய நிறுவனம் இடையே  புரிந்துணர்வு  ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் ஸ்விங்  ஸ்டெட்டர்   நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உற்பத்தி பொறியியல் பட்டப் படிப்பை விஐடி வழங்க உள்ளது. விஐடி பல்கலைக்கழகம் சார்பில் விஐடி வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் மற்றும் ஸ்விங்  ஸ்டெட்டர்  இந்திய நிறு வனம் சார்பில் நிறுவனத்தின் தலைவர், மேலாண்மை இயக்குநர் சக்தி குமார் இருவரும் கையெழுத்திட்டனர். விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன்,  டாக்டர் ஜி.வி. செல்வம், துணை வேந்தர் டாக்டர் ராம்பாபு கோடாலி,  இணை துணை வேந்தர் டாக்டர் பார்த்தா சாரதி மல்லிக்,  பதிவாளர் டாக்டர் ஜெயபாரதி  மற்றும் ஸ்விங்                ஸ்டெட்டர் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் விஐடி இயந்திரவியல் துறை தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.