இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வில்லிவாக்கம் பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.கார்த்திக் - டி. தமிழரசி ஆகியோரது திருமணம் ஜூலை 7 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே.மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவரிடம் மணமக்கள் தீக்கதிர் சந்தா தொகையை வழங்கினர். கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, எஸ்.கே.முருகேஷ், வெ.தனலஷ்மி, பகுதி செயலாளர் ஜி.அன்பழகன், 98வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ. பிரியதர்ஷினி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.மதியழகன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.