சென்னைக்கு அருகே இரண்டாவது விமான நிலையத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர், வளத்தூர், கொடவூர், ஏகனாம்புரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் 4,791 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்துகிறது. நிலத்தை கையகப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை இடம்பெற்ற தீக்கதிர் செய்தியை கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர்கள் முத்துக்குமார், நேரு, சங்கர் ஆகியோர் பொதுமக்களிடம் வழங்கினர்.