districts

img

வேலூர் டி.தேவராஜ் காலமானார்

வேலூர், பிப். 1 - காப்பீட்டு கழக ஊழியர் சங்க வேலூர் கோட்ட முன்னாள் துணைத் தலைவர் தோழர் டி.தேவராஜ் (52)  காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். மீண்டும் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  தேவராஜ் உடல், வேலூர் சத்துவாச்சாரி முல்லை நகரில் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிப். 2 ஞாயிறன்று காலை இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் தாலுகா குழு முன்னாள் உறுப்பினர், வாலிபர் சங்க முன்னாள் தாலுகா துணை செயலாளர் தேவராஜ் மறைவுக்கு சிபிஎம் வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி இரங்கல் தெரிவித்துள்ளார்.  மறைந்த தேவராஜ் மறைவுக்கு செல்வி என்ற மனைவியும்,  அஜித் என்ற மகனும், ரூபாவதி என்ற மகளும் உள்ளனர்.