விழுப்புரம், ஜூலை 7-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்-மரக்காணம் சாலை யில் திண்டிவனம் காவல்துறை உதவி ஆய்வாளர் ஸ்டாலின் தலைமையில் காவலர்கள் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாக னத்தில் வந்த 2 பேரை நிறுத்தினர். ஆனால், நிற்காமல் தப்பி ஓட முயன்றனர். சிறிது தூரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த முத்து (34), டி. அரியலூரை சேர்ந்த சிவா என்கிற சின்ன கவுண்டர்(31) என்பது தெரிய வந்தது. அவர்கள் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.