இந்திய சுதந்திரப் போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில் லாசுப்பேட்டை உழவர் சந்தை சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள், திருமுருகன், சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.