ராணிப்பேட்டை, மே 18 - காட்டுநாயக்கன் பழங்குடி மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும் வகையில் சாதிச் சான்றிதழ்களை வழங்கவேண்டும் என்று காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் வாலாஜாபேட்டையில் வியாழனன்று (மே. 16) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பழங்குடி மக்கள் ஒருங் கிணைப்பாளர் எஸ். பழனி காட்டுநாயக்கன் பழங்குடி சான்று சம்பந்தமாக பல்வேறு ஆவணங்கள் அரசின் உத்தரவுகள் பற்றி விளக்கி பேசினார். தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாள ரும், தமிழ்நாடு ஆன்றோர் மன்ற உறுப்பினர் இரா. சரவணன் பேசுகையில் கல்லூரி படிப்பை தொடர்ந்திட தமிழக அரசு உடனடி யாக காட்டுநாயக்கன் பழங்குடி சான்று களை வழங்க வேண்டும் என வலியுறுத் தினார். இந்தகூட்டத்தில் திருவள்ளூர், ராணிப் பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து ஏராளமான காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாநில பொருளா ளர் தயாளன் நன்றி கூறினார்.