திருவள்ளூர், பிப்.13-
திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டம் காரணமாக வியாழனன்று (பிப் 13), காலையில் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்த மல்லி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனி மூட்டம் காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட வாறு சென்றனர். பனி காரணமாக ரயில் நிலையத்திற்குள் வரும் புறநகர் மற்றும் விரைவு ரயில்கள் மெதுவாக இயக்கப்படுவதால் ரயில்கள் நேரத்தில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் காலை 9 மணி வரை பனி மூட்டம் காணப்படுவதால் காலையில் நடை பயிற்சி செய்பவர்கள் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பணிக்குச் செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.