சிதம்பரம், ஜூலை 26-
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் 16 பேர், பல்கலைக்கழக இணை பேராசிரியர் முனை வர் வி.சக்திவேல் வழிகாட்டு தலின்படி , பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் கிராமத்தில் 3 மாதங்கள் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது.
பேரூராட்சி மன்றத் தலைவர் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி னார். துணைத் தலைவர் ஹாஜி. எம்.எஸ் . முஹம்மது யூனுஸ் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் விவசாய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மாணவிகள் சார்பில் விருந்தினர்களுக்கும் விவ சாயிகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.