மதுராந்தகம், ஜூலை. 18-
மூசிவாக்கம் கிராமத் தில் ஆக்கிரமிப்பு செய்த பொது இடத்தை மீட்டுத்தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற் குட்பட்ட மூசிவாக்கம் கிராமத்தில் பொது பயன் பாட்டிற்கென சர்வே எண் 149/7, 149/8 ஆகிய வற்றில் 20 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பொது குடி தண்ணீர் கிணறு, வானொலி அறை என கிராம கணக்கில் உள்ளது. இந்த இடம் அரு கில் உள்ள சில தனி நபர்க ளால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து பல முறை கிராம நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் அங்கு குடி தண்ணீர் எடுக்க முடியா மல் கிராம மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆக்கிர மிப்பு இடங்களை மீட்டு பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மூசிவாக்கம் கிளை கோரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிபிஎம் மூசிவாக்கம் கிளை சார்பில் வையாவூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவல கம் முன்பு கிளை செயலா ளர் என்.மோகன் தலைமை யில் காத்திருக்கும் போராட்டம் செவ்வாயன்று (ஜூலை 18) நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ். அர்ஜுன் குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.சசிகுமார், கே.வனிதா, கிராம வார்டு உறுப்பினர் எஸ்.பிரேமா சரண்ராஜ் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய் வாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர் கட்சியின் நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வரும் வியாழனன்று நிலம் அள வீடு செய்யப்பட்டு கிராம நிர்வாகத்திடம் வழங்கப் படும் என உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.