ஊத்துக்கோட்டை அருகில் உள்ள வாழவந்தான் கோட்டையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கிளை சார்பில் புதனன்று (ஜூலை 5), தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கப்பட்டது. இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாநில துணைத் தலைவர் இ.கங்காதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.