districts

img

பொய் வழக்கில் வாலிபர் சங்க நிர்வாகியை 13 மணி நேரம் சிறை வைத்த போலீஸ்

விழுப்புரம், ஜன.31- பொய் வழக்கில் சட்ட விரோத மாக காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்ட வாலிபர் சங்க திண்டிவனம் வட்டார நிர்வாகி 13 மணி நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், திண்டி வனம் வட்டம், விட்டலாபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு மற்றும் வண்டி பாதை புறம்போக்கு  நிலம் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனுவை அளித்த வாலிபர் சங்க நிர்வாகி திருமுருகன் மீது ஆக்கிரமிப்பாளர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். ஆனால், காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கா மல், திருமுருகன் மீது பொய் வழக்கு போட்டு, அதிகாலை 5 மணிக்கு சட்டவிரோதமாக கைது செய்து ரோசனை காவல் நிலையத்தில் அடைத்தனர்.  இந்த தகவலை அறிந்து, வாலி பர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்கள் காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு நீண்ட நேரம் சட்டப்போராட்டம் நடத்தினர். ஆனால், காவல்துறை யினர் வேண்டும் என்றே அழைக் கழித்தனர். இதையடுத்து, வாலிபர் சங்கத்தினர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதனால் வேறு வழியின்றி சுமார் 13 மணி நேரத்திற்கு பிறகு வாலிபர் சங்க நிர்வாகி திரு முருகனை காவல்துறையினர் விடுவித்தனர்.  மேலும், வாலிபர் சங்க நிர்வாகி திருமுருகன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய விட்டாலாபுரம் கிராமத்தை ஜெயபால் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த போராட்டத்தில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அறி வழகன், திண்டிவனம் வட்டத் தலைவர் பார்த்திபன், வட்டச் செய லாளர் சதீஷ்குமார், வட்டப் பொரு ளாளர் இர.பாரதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், மதன்ராஜ், சிவக்குமார், மற்றும் சிபிஎம் திண்டிவனம் வட்டச் செயலாளர் ஏ.கண்ணதாசன், வட்ட நிர்வாகிகள் குமரேசன், சரவணன், சேவியர் ஆகியோர் பங்கேற்றனர்.