districts

சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் தீவிரம்

காஞ்சிபுரம், பிப். 9- சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் இந்தியா தொழிற்சாலையில் சிஐடியு தொழிற் சங்கம் அமைத்ததற்காக நிர்வாகம் மேற்கொண்டு வரும் பழிவாங்கல் நட வடிக்கைகள் காரணமாக தொழி லாளர்கள் கடந்த பிப்ரவரி 5 முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஐடியு தொழிற்சங்கம் அமைத் ததை அடுத்து, தொழிலாளர்களை இட மாற்றம் செய்வது, நிர்வாகம் உரு வாக்கிய போட்டி கமிட்டியில் சேரு மாறு கட்டாயப்படுத்துவது, வட்டி யில்லா கடன் ரூ.3 லட்சத்தை மறுப்பது உள்ளிட்ட பல்வேறு பழிவாங்கல் நட வடிக்கைகளை நிர்வாகம் மேற் கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி சங்கத்தின் துணைச் செய லாளர் குணசேகரன், பிப்ரவரி 5-ஆம் தேதி சங்க நிர்வாகிகள் மோகன்ராஜ், தேவன் ஆகியோர் எந்த முன்னறி விப்பும் இன்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்பட வில்லை. மேலும், போராட்டம் நடை பெறும் காலத்தில் 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களை வைத்து சட்ட விரோதமாக உற்பத்தி நடைபெற்று வருவதாக சிஐடியு குற்றம்சாட்டி யுள்ளது. இந்நிலையில், வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி தொழிற்சாலை பாது காப்பு மற்றும் உணவு இயக்குனர் அலு வலகத்தில் மனு அளிக்கவும், அதே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலை களிலும் ஒரு நாள் உணவு புறக்கணிப்பு  போராட்டமும், பிப்ரவரி 14-ஆம் தேதி  காஞ்சியில் பெருந்திரள் கவனயீர்ப்பு போராட்டமும் நடத்த சிஐடியு முடிவு செய்துள்ளது. தொழிலாளர்களின் போராட்டத் திற்கு உடனடி தீர்வு காண தமிழக அரசும், தொழிலாளர் துறையும் தலை யிட வேண்டும் என சிஐடியு காஞ்சி புரம் மாவட்ட குழு வலியுறுத்தியுள் ளது.