நாகர்கோவில், டிச. 7- கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப் படும் மதிப்பூதியத்தை ரூ.2000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கிராம ஊராட்சிகளின் செயல் அலுவலர்களாக உள்ள கிராம ஊராட்சி தலைவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி, அரசாணை (நிலை) எண் 132, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (பரா-4) துறை நாள் 15.11.2021- இன்படி தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.