districts

img

பதிவான வாக்குகளின் விவரங்களை வெளியிடுவதில் இவ்வளவு தாமதம் ஏன்?

புதுதில்லி, மே 18 - மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்தின்போது அளிக்கப்பட்ட வாக்கு சதவீதத்தின் இறுதிப் புள்ளி விவரம் வாக்குப்பதிவு நடைபெற்று 11 நாட்கள் கழிந்த பின்னர் தாமதமாக வெளியிடப்பட்டது. அதேபோன்றே இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்த பின்னரும் நான்கு நாட்கள் தாமதமாக வாக்குப்பதிவு குறித்த புள்ளிவிவரம் வெளியாகி இருந்தது. ஆனால், முதலாவதாக வெளி யிட்ட புள்ளி விவரத்திற்கும், இறுதியாக வெளியிட்டுள்ள புள்ளி விவரத்திற்கும் இடையே வாக்கு வித்தியாசம் 6 சத விகிதம் அதிகரித்து இருந்தது. இது  அசாதாரணமானது என்று விமர்சித்தி ருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, பதிவான மொத்த வாக்கு களின் எண்ணிக்கையை வெளி யிடாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி யிருந்தார். இதுதொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள், தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கே நேரடியாக சென்று புகார் அளித்து முறையிட்டிருந்தனர். இந்நிலையில், ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் (ADR),  கடந்த மே 10 அன்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், ‘‘நடைபெற்று வரும் மக்களவை பொதுத்தேர்தலில் மூன்று கட்ட வாக்கு பதிவுகள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும் வாக்குப் பதிவுக்கான முழு விவரங்களை மிகவும் தாமத மாகவே இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதிலும் ஏராளமான குளறுபடிகள் இருக்கிறது. இது தேர்தல் நேர்மை யாக நடக்கிறதா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே வாக்குப் பதிவு விவரங்களை உடனடியாகவும், துல்லியமாகவும் வெளியிட இந்திய  தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் ஒரு வழிகாட்டுதலுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்கவேண் டும்” என்று வலியுறுத்தி இருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலை மை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமை யிலான அமர்வில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘‘தேர்தல் அதிகாரி யிடம் இருந்து படிவம் 17சி-இல் இருந்து புள்ளி விவரங்களை பெற்று வெளியிடு வதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலை. ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை என்பதே குற்றச்சாட்டு” என்று தெரிவித்தார்.  வாதத்தின்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “ஒரே இரவில் விவரங்களை வாங்கி வெளியிடுவதற்கு உங்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது. மாலை 6 அல்லது 7 மணிக்குள் வாக்குப்பதிவு முடிந்து விடுகிறது. இதையடுத்து அதிகாரிகளிடம் இருந்து தரவுகளை வாங்கி நீங்கள் பதிவேற்றம் செய்ய லாமே. உங்களுக்கு போதுமான கால அவகாசம் உள்ளது தானே”  என்று தேர்தல்  ஆணையத்துக்கு  கேள்வியெழுப்பி

;