திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் வயலூரில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் புதிய கிளை திங்களன்று (செப்.4), துவங்கப்பட்டது. சங்க கொடியை மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு ஏற்றிவைத்தார். தகவல் பலகையை மாநில துணைத் தலைவர் இ.கங்காதுரை திறந்து வைத்தார். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் அற்புதம், ஒன்றிய தலைவர் சின்னராசு, செயலாளர் தேவி, கிளைத் தலைவர் ராமு, செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.