விக்கிரவாண்டி வட்டம், காணை ஊராட்சி ஒன்றியம், கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 33 வயதான வாலிபர் ஒருவர் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் த.மோகன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.