நாட்டில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டின் மண் ணெண்ணெய் தேவை மூன்று மாதங்க ளுக்கு 1.50 லட்சம் கிலோ லிட்டராக இருந் தது. ஆனால், பிரதமர் மோடியின் ஒன்றிய அரசோ வெறுமனே 81,000 கிலோ லிட்டரை மட்டுமே ஒதுக்கீடு செய்தது. இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு மண்ணெண் ணெய் வழங்கும் அளவை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த உடனே 69,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் யை தடாலடியாக குறைத்த மோடி அரசு, அத்துடன் நின்றதா? இல்லை. சில மாதங்க ளில், மேலும் 30,000 லிட்டரை குறைத்து தனது சுய ரூபத்தை காட்டியது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக அரசு இதை இன்னும் கடுமையாக குறைத்து, வெறும் 6000 கிலோ லிட்டரே வழங்கியது.
இதனால், கிராமப்புறம் மட்டுமன்றி மலை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நிலைமை மோசமானது. இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் அர. சக்கர பாணி ஒன்றிய அரசுக்கு இரண்டு முறை கடிதம் எழுதியும் பலன் இல்லை.
நயவஞ்சகம்...
2023 ஆம் ஆண்டின் நிலவரப்படி தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் எரிவாயு இணைப்பு இல்லாமல் உள்ளனர். இந்த நிலையில் நமது மாநிலத்தின் தற் போதைய மண்ணெண்ணெய் தேவை 95,000 கிலோ லிட்டர் ஆகும். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் பாஜக அரசு ஒதுக் கீடு செய்திருப்பது வெறுமனே 2,712 கிலோ லிட்டர்தான். இது 7 விழுக்காடு மட்டுமே.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மற்றும் மாவட்ட தலைநக ரங்களில் நுகர்வோருக்கு 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. ஆனால்,9 ஆண்டு காலம் ஆட்சி செய்து வருகிறோம் என்று பெருமை பெற்றுக் கொள்ளும் ஒன்றிய பாஜக அரசு, தமிழ் நாட்டில் திமுக அரசையும் அதன் கூட்டணி கட்சிகளையும் அரசியல் களத்தில் நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் ஆட்சி அதிகாரத்தை தங்கள் கையில் வைத்துக் கொண்டு பழி வாங்கும் போக்கை கடை பிடித்து வருகிறது.
இதன் விளைவு தான், 10 லிட்டர் மண்ணெண்ணெய் ஐந்து லிட்டராக குறைந்தது. அதுவும் பிறகு 3 லிட்டரா னது. படிப்படியாக ஒரு லிட்டரில் வந்து நின்றது. இப்போது அதுவும் இல்லை என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட் டுள்ளது ஒன்றிய பாஜக அரசு. சி. ஸ்ரீராமுலு