districts

img

மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை வெகுண்டெழுந்த தமிழ்நாடு

1. மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்தும், கலவரத்தை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பாஜக அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் புதுச்சேரியில் சிபிஎம் நகரச் செயலாளர் மதிவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம்  மற்றும் பலர் உரையாற்றினர்.

 2. கலசப்பாக்கத்தில் கிளைச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பு.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

3. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன் மற்றும் பல்வேறு அமைப்பு தலைவர்கள் உரையாற்றினர்.

4. காட்பாடி-சித்தூர் பேருந்து நிலையத்தில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பெ.திலீபன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 5. சிதம்பரம் மேல வீதி பெரியார் சிலை அருகே சிபிஎம், காங்கிரஸ், சிபிஐ, விசிக, மதிமுக, திக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும், கிருஷ்ணகிரியில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பிலும் விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.