கடலூர்,ஜூலை 15-
கடலூர் மாவட்டத்தில் வருகிற 20 ஆம் தேதி பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெறுகிறது என்று ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் அவ்வறிப்பின்படி 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழா தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருகிற 20 ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.
இப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பட உள்ளன.
மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும் உள்ளன.
பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்தம் பள்ளி மாணவர்களிடையே முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சு போட்டிகள் நடத்தி மாணவிகளை தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் கல்லூரிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர் பட்டியல் கல்லூரிகளில் முதல்வர்கள் வழியாகவும் நேரில் ,அஞ்சலில் அல்லது மின்னஞ்சலில் இம் மாதம் 19 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கும் கல்லூரிகளுக்கு பிற்பகல் 2.30 மணிக்கும் போட்டி கள் தொடங்கும். இப்போட்டிகளில் கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.