districts

img

மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் ஒப்பந்தம் கையெழுத்து

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக சென்னை முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் (எம்எம்எம்) மருத்துவமனை ஊழியர்கள் 400 பேர் 42 மாதங்களாக போராடி வந்தனர். இதனை தொடர்ந்து தொழிலாளர் துறை ஆணையர் வெற்றிச்செல்வி முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. மருத்துவமனையின் மனிதவள மேலாளர் மீனாட்சி, எம்எம்எம் ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) தலைவர்கள் ரமேஷ் சுந்தர், ரமேஷ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.