சிதம்பரம்,நவ.3- தமிழக தேர்வாணையம் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு 307 பேரும் உதவி வேளாண் அலுவலர் பணிக்கு 122 பேருக்கு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான கல்வி தகுதி அரசு அங்கிகாரம்பெற்ற விவசாய கல்லூரியில் பட்டய படிப்பு படித்திருக்க வேண்டும் என்றும் கோவை வேளாண் கல்லூரி, திண்டுக்கல் காந்தி கிராம் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது. இந்த பணிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக விவசாய துறை யில் கல்வி பயின்ற மாணவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. கடந்த மார்ச் மாதம் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் குமரவேல் உள்ளிட்டவர்கள் அப்போதைய துணைவேந்தர் முருகேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்க தமிழக தேர்வாணை யத்திற்கு பரிந்து ரைத்தனர். அதன்பேரில் அண்ணா மலைப் பல்கலைக்கழக விவசாய துறை யில் பட்டயப் படிப்பு பயின்ற மாண வர்கள் 300க்கும் மேற்பட்டோர் தேர்வில் கலந்துகொண்டனர்.
இந்த தேர்வு முடிவு கடந்த செப் 23-ஆம் தேதி வெளியானது. இதில் பல்கலைக்கழகத்திலிருந்து தேர்வு எழுதிய 180-க்கும் மேற்பட்ட வர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக வரும் 8,9-ஆம் தேதிக்கு கோவை வேளாண் மற்றும் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க அழைப்பு விடுத்துள்ள னர். ஆனால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை சான்றிதழ் கலந்தாய்வு குறித்து அழைக்க வில்லை. இந்த நிலையில் வெள்ளியன்று(டிச.3) தமிழக தேர்வாணய தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து தமிழக தேர்வாணையத்தில் வேளாண் அலுவலர் பணிக்கு வெற்றி பெற்ற வேளாண் மாணவர்களை கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கண்ணன், மாவட்டச் செயலாளர் குமரவேல், நிர்வாகிகள் லெனின் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் கதிரேசன், சிண்டிகேட் உறுப்பினர் சிந்த னைச்செல்வன் எம்எல்ஏ உள்ளிட்ட வர்கள் அரசிடம் பேசி இது குறித்து முடிவு எடுப்பதாக உறுதி கூறியுள்ளனர். கலந்தாய்வு வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சரியான முடிவு வரும் வரை மாணவர்கள் இரவு பகல் என தொடர்ந்து தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து பல்கலைக்கழக வளாகத்தில் ஈடுபட்டு உள்ளனர்.