சென்னை, டிச. 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொளத்தூர் முன்னாள் பகுதிக்குழு உறுப்பினர் தோழர் கே.முனு சாமி (76) செவ்வாய்க் கிழமை (டிச. 26) இரவு 8 மணி யளவில் காலமானார். இவர் கில்பர்ன் ஆலைத்தொழிலாளியாக இருந்தபோது தொழிற்சங்க முன்னோடிகள் வி.பி.சிந்தன், கே.எம். ஹரிபட் போன்றவர்களின் வழிகாட்டு தலில் 1975ஆம் ஆண்டு தன்னை கட்சியில் இணைத் துக் கொண்டார். கொளத்தூர் பகுதிக் குழு உறுப்பினராகவும், 66ஆவது வட்ட கிளைச் செயலாளராக வும் செயல்பட்டார். அவசர காலத்தில் தோழர்களின் தலைமறைவு வாழ்க்கைக்கு பெரிதும் உதவி புரிந்தவர். தீக்கதிர் விநியோகித்தவர் தீக்கதிர் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். பல வருடங் கள் சைக்கிளில் சென்று தீக்கதிர் நாளிதழை விநியோ கம் செய்தார். அவரது பவள விழா திருமண (குடும்ப) நிகழ்வில் தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கி களப்பணி யாற்றும் தோழர்களை கவுரவித்தார். அவரது உடலுக்கு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன், செயற்குழு உறுப்பி னர் ஆர்.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கதிர்வேல், தமிழ் செல்வி (மாதர் சங்கம்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் புதன்கிழமை மாலை திருவிக நகர் தாங்கல் பகுதி யில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.