கடலூர்,பிப்.23- வாக்குச்சாவடி எந்திரங் களில் பாஜக மோசடி செய்யாதவாறு, இந்திய தேர்தல் ஆணையம், நேர் மையான தேர்தலை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கடலூரில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட செயலா ளர்கள் அறிவுடை நம்பி, அரங்க தமிழ்ஒளி, திராவிட மணி ஆகியோர் தலைமை தாங்கினர். விசிக பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ, கடலூர் மாநகராட்சி துணை மேயருமான பா.தாமரைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ். ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் கோ.மாதவன், மாநகர செயலாளர் ஆர்.அமர் நாத், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் திலகர், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் குளோப், தமுமுக மாவட்ட செயலா ளர் அப்துல் ரஹீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் முக மது இஸ்மாயில், திராவிட கழக மாவட்டச் செயலாளர் எழிலேந்தி, பாலு(மக்கள் அதிகாரம்), அருள்பாபு (தவாக) உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.