செங்கல்பட்டு, மே 13- செங்கல்பட்டு மாவட்டம், மறை மலைநகர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு ஏராளமாக குடியிருப்பு பகுதிகள் தொழிற்சாலைகளும், வணிக நிறு வனங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வளர்ந்து வரும் நகராட்சியான மறை மலை நகரை தூய்மையாக வைத்துக் கொள்ள பணியாளர்களின் பணி மிக மிக முக்கியமானதாக உள்ளது. ஆனால், பெரும்பாலான தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த முறையில் தான் பணியாற்றி வரு கிறார்கள். அவர்களுக்கு முறையாக ஊதி யம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது . அதேபோன்று, தூய்மை பணியாளர்க ளுக்கு வழங்க வேண்டிய கையுறைகள், பாதுகாப்பு காலணிகள் உட்பட எந்த உபகரணமும் முறையாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத னால், குப்பைகளை வெறும் கையால் அள்ளும் அவலம் நீடித்து வருகிறது. எனவே, தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.