சென்னை, மே 9- சென்னையில் மே 11, 12 ந்தேதிகளில் ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது. இதுகுறித்து, சென்னையில் உள்ள ரஷ்ய பண்பாட்டு மையத்தில், ரஷ்ய கல்விக் கண்காட்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு புதனன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தென்னிந்தி யாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் அவ்தீவ் ஓலெக், ரஷ்ய கலாச்சார மையத்தின் இயக்கு நரும், துணைத் தூதருமான அலெக் ஸாண்டர் டோடோநவ், ரஷ்யாவில் மருத்து வக் கல்வி ஆலோசகர் ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் (Study Abroad Educational Consultants) நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சி.ரவிச் சந்திரன் ஆகியோர் கூட்டாக கூறியதாவது: கடந்த 60 ஆண்டுகளாக இந்திய மாணவர்கள் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள். “இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் (National Medical Commission) மாறிவரும் விதி முறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே கடைப்பிடித்து வருவதால், வெளிநாடு களில் மருத்துவக் கல்வியை நாடும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவே முதன்மை யான தேர்வாக இருக்கிறது. 2024-25ஆம் கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 8000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வழங்க உள்ளன. இது கடந்த ஆண்டு 5000 என்ற எண்ணிக்கையில் இருந்தது. 50 விழுக்காடு மதிப்பெண்கள் போதும் தேசிய தகுதி - நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெற்ற, 12-ஆம் வகுப்பில் முக்கிய பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்ற இந்திய மாணவர் கள் (எஸ்.சி./எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் பொறுத்த வரை, குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40% மட்டுமே), ரஷ்யா மருத்துவத்தில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் வழியில் படித்த மாணவர்களும் எம்.பி.பி.எஸ். / பி.இ. படிப்புகளுக்கு விண்ணப் பிக்கலாம். ரஷ்யாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி. (CET), ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) போன்ற முன் தகுதித் தேர்வுகள் தேவை இல்லை” என்று தெரிவித்தனர். இந்த மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்பாட் அட்மிஷன், மே 11, 12 ஆகிய தேதி களில், சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய பண்பாட்டு மையத்தில் நடைபெறும். மேலும் இந்தக் கண்காட்சி மே 14-ஆம் தேதி மதுரை ரெசிடென்சி ஓட்டலிலும்; மே 15-ஆம் தேதி திருச்சி ஃபெமினா ஓட்டலிலும்; மே 16-ஆம் தேதி சேலம் ஜி.ஆர்.டி. ஸைப் ஓட்டலிலும், மே 17-ஆம் தேதி கோவை தி கிராண்ட் ரீஜெண்டிலும் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. தகுதியுள்ள மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். மட்டு மல்லாது பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் ஸ்பாட் அட்மிஷன் வழங்கப்படும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ள இக்கல்விக் கண்காட்சி யில், ரஷ்யாவின் பிரபலமான பல்வேறு பல்கலைக்கழகங்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர். இக்கண்காட்சிகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9282 221 221.