செங்கல்பட்டு, டிச.11- உலக மாற்றுத்திறனாளி தினவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 61.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்று 59 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மின்கலனில் இயக்கப்படும் சக்கர நாற்காலி, பிரெய்லி ரீடர் என 61லட்சத்து 60 ஆயிரத்து 854 ரூபாய் மதிப்பி லான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கல்வி, திருமணம் ,இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் ஈமச்சடங்கு மற்றும் ஓய்வூதியம் உட்பட 60 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் ்கள் அரவிந்த் ரமேஷ், வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, பாராளு மன்ற உறுப்பினர் க.செல் ்வம், மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் செம்ப ருத்தி, ஒன்றியக்குழு பெருந் ்தலைவர்கள் இதயவர்மன், சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.