districts

img

ரூ. 120 கோடியில் சாலைகள் விரிவாக்கம்

திருவண்ணாமலை, ஜூலை 18-

     ஜவ்வாதுமலை பரமனந் தல் முதல் அமிர்தி வரை ரூ.120 கோடியில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

    திருவண்ணாமலை  மாவட்டம், ஜவ்வாது மலை யில் மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த  கோடை விழா செவ்வா யன்று (ஜூலை 18) நடை பெற்றது. மாநில இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்.  

    மேலும், ஜமுனாமரத் தூரில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுலா மாளிகை மற்றும் அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சி, மலர், காய்கறி கண்காட்சியையும் அவர் திறந்து வைத்தார்.

     இந்த விழாவில் ரூ.242  கோடியில் 8,608 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி னார். மாவட்டத்தில் ரூ.145 கோடியில் முடிவுற்ற 583 கட்டிட பணிகளையும் அமைச்சர்  திறந்து வைத்து  ரூ.164 கோடியில் புதிய கட்டிட பணிகளுக்கு அடிக் கல் நாட்டினார்.

     விழாவில் பேசிய அவர் “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற  நோக்கில் 68 விழுக்காடாக இருந்த பழங்குடியினருக் கான இட ஒதுக்கிட்டை 69  விழுக்காடாக  உயர்த்தப் பட்டது”என்றார்.

     மலைப் பகுதிகளில்  உண்டு உறைவிடப்பள்ளி கள் திறக்கப்படுவதால் மருத்துவர் உருவாக்கப் படுகிறார்கள். பழங்குடியின மாணவர்களுக்கு விளை யாட்டு துறையில் முக்கி யத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

     இவ்விழாவில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலா துறை  அமைச்சர் கா.ராமச் சந்திரன், சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச் சாண்டி, மக்களவை  உறுப் பினர்கள்  சி.என்.அண்ணா துரை, எம்.கே.விஷ்ணு பிரசாத், மாவட்ட ஆட்சி யர் பா.முருகேஷ், சட்ட மன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார், ஜோதி, பெ.சு.தி.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.