districts

அதிக சம்பளம் தருவதாக ஆன்லைனில் ரூ.19 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி, ஜூலை 11-

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அம்மன் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகன் கலையரசன் (29). இவர் ஓசூர்  தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது வாஸ்  அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.  இதில் பகுதி நேர வேலையில் சிறிய முதலீடு செய்தால், அதிக சம்பளம், அதிக கமிஷன் தொகையை தருவ தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  

    அதை நம்பிய கலையரசன் இந்த எண்ணை தொடர்பு கொண்டு விவரத்தை கேட்ட போது, எதிர்முனை யில் பேசிய மர்ம நபர்கள் குறிப்பிட்ட தொகையை முதலில் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். உடனே  அவர்கள் கூறிய வங்கி கணக்கில் கலை யரசன் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தியுள்ளார்.

    அதன் பிறகு, இந்த எண்ணை தொடர்பு கொண்ட போது மர்ம நபர்கள்  போனை எடுக்கவில்லை. தொடர்ந்து அவர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது மர்ம நபரின்  செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.  

    இதுகுறித்து கலையரசன் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல் துறையிடம் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று ஓசூர் பத்தலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னையன். அவரது மகன் நவநீதகிருஷ்ணன் (39). இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரு கிறார். அவரது செல்போனுக்கு கடந்த  சில நாட்களுக்கு முன்பு அதிக சம்பளத்தில் பகுதி நேர வேலை தருவ தாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.  

   அதை நம்பிய அவர் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய  போது, மர்ம நபர் கூடிய வங்கி கணக்கில் ரூ.6 லட்சத்து 32 ஆயி ரத்தை செலுத்தியுள்ளார். அதன்பிறகு  அவர் அந்த மர்ம நபரின் செல்போன்  எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இது குறித்து அவர் மாவட்ட சைபர் பிரிவு குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார்  தெரிவித்தார்.  

   காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து படித்த இளைஞர்களை குறிவைத்து இதேபோன்று ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை விரைந்து பிடிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  மேலும், ஆன்லைன் மூலம் மோசடி  நடை பெறுவதை தவிர்க்க இளைஞர் களுக்கு செல்போன் மூலம், ஒலி பெருக்கி மூலம் அதிகளவில் விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;