சென்னை மேடவாக்கம் ஜி ஸ்கேட் பார்க்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில், 5-6 வயதுடையோர் பிரிவில், பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் - நீலாம்பரி தம்பதியின் மகள், பெரும்பாக்கம் கிரிதசாலா பள்ளி மாணவி நிவிஷா ஸ்ரீ தங்கப்பதக்கம் வென்றார். இதனையொட்டி சனிக்கிழமையன்று (செப்.28) நடைபெற்ற பள்ளி விளையாட்டு விழாவில் மாணவிக்கு பள்ளி நிறுவனர் சங்கீதா சுரேஷ், இயக்குநர் வித்யா சங்கர் ஆகியோர் தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டினர்.