districts

img

சாலையோர சிறுகடை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஆக.24-

     சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். நகர விற்பனை குழுவிற்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். சாலையோர வியா பாரிகள் பாதுகாப்பு சட்டத்தில் கிராம ஊராட்சி களையும் இணைக்க வேண்டும்.கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடனாக ரூ.15,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட சாலையோர சிறு கடை தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் சேட்டு, துணைத் தலைவர் குப்பம்மாள், செயலாளர் இதயத்துல்லா, சிஐடியு மாநிலச் செய லாளர் பி.கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், மாவட்டஙச செயலாளர் எஸ். சங்கமேஸ்வரன், மாவட்ட துணைத் தலைவர் ஜி. பாஸ்கரன், இணை செயலாளர் வி. திருமுருகன், துணை தலைவர் வி.சுப்பராயன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.