districts

img

தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் சாலை விபத்துக்கள்...

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டத்தில் உள்ள சென்னை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி எதிரில் மேம்பால பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழைஅரிப்பாலும் கனரக வாகனங்களின் போக்குவரத்தாலும் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில்  விபத்துக்குள்ளாகின்றன. இதை மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.