சென்னை விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்த போராட்டத்தில் மக்களை அணிதிரட்டிய கே.பரமேஸ்வரி, அவரது மகள்கள் கே.பிரியா - கே.பூர்ணிமா ஆகியோரின் 17வது ஆண்டு நினைவு தினம் புதனன்று (ஜன.22) அனுசரிக்கப்பட்டது. பொழிச்சலூரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.தாமு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சி.பிரபாகரன், எஸ்.ஜெயசங்கரன் உள்ளிட்டோர் பேசினர்.