districts

img

குபேந்திரன் நகர் சாலைகள் விரைந்து சீரமைக்கப்படுமா?

சென்னை, மே 30 - பாதாள சாக்கடை, மழைநீர்க் கால்வாய் உள் ளிட்ட பணிகளை முடித்து சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று மடிப்பாக்கம் தென்கிழக்கு இளையோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, 188வது வட்டம் குபேரன் நகர் 13-15 தெருக்கள், எல்ஐசி நகர்  முதல் மற்றும் 2வது தெருக்க ளில் மாநகராட்சி மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. இந்த பணிகளை குமார் பில்டர்ஸ் என்ற நிறு வனம் செய்து வருகிறது. கால்வாய் அமைக்க தோண்டிய மண்ணை அகற்றாமல், தெருக்களின் ஓரத்திலேயே கொட்டி வைத்துள்ளனர். இதனால் போக்குவரத் துக்கு இடையூறு ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தெருக்களின் முடிவில் தோண்டிய பள்ளங்களை மூடாமலும், மின்கம்பங்கள் உள்ள இடங்களில் பணி களை முடிக்காமல் உள்ள னர். மழைக்காலம் தொடங் கும் முன்பு இந்த பணிகளை முடிக்க வில்லை என்றால், வெள்ள நீர் வெளியே வரா மல் அனைத்து தெருக்களி லும் தேங்கி நிற்கும். இதேபோன்று பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் குறைபாடு நிலவு கிறது. பணி முடிந்த இடங்க ளில் அனைத்து வீடுகளுக் கும் இணைப்பு வழங்காமல் உள்ளனர். சாலைகளை செப்பனிட கொண்டு வந்து கொட்டப்படும் கட்டிட இடி பாடுகள், கற்கள் போன்ற வற்றை சமப்படுத்தாமல் உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பாத சாரிகளும் சிரமப்படுகின்ற னர். மழைநீர் வடிகால்வாய் பணியின் போது, கல், மண் சரிந்து அருகே உள்ள பழைய கழிவுநீர் கால் வாயை அடைத்துக் கொண்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. பாதாள சாக்கடை பணியின் போது, ஒரு சில இடங்களில் குடிநீர் குழாய் இணைப்புகள் உடைந்துள்ளது. அவற்றை யும் சீரமைக்காமல் உள்ளனர். எனவே, திட்டப்பணி களை விரைந்து முடித்து, தெருக்களை சீரமைத்து, தார்ச் சாலைகள் அமைக்க வேண்டும் என்று சோழிங் கநல்லூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் வியா ழனன்று (மே 30) சந்தித்து நல சங்கத்தின் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

;