சென்னை, மே 26 -
பள்ளிக்கு அருகாமையில் உள்ள மது பானக் கடையை அகற்ற வலியுறுத்தி டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
அண்ணாநகர் பகுதி, கீழ்பாக்கம் கார்டன் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையால் (எண்.448) மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கடையிலிருந்து 20 அடி தூரத்தில் கோவிலும், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியும் உள்ளது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். மது பான கடையால் ஏற்படும் கூட்ட நெரிசலால் மாணவர்களும், பொதுமக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
இந்த கடையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் (எண் 432, 448) இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடையை அகற்ற வலியுறுத்தி வாலிபர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக வியாழனன்று (மே 25) டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன், பொது மேலாளர் ராமதுரை ஆகியோரை, வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன், அண்ணா நகர் பகுதிச் செயலாளர் எஸ் மணிகண்டன், பொருளாளர் ப.ரங்கநாதன் உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர்.