districts

img

சிஜிஎச்எஸ் சிகிச்சை கட்டணத்தை மாற்றியமைக்க கோரிக்கை

சிஜிஎச்எஸ் மருத்துவ திட்டத்தில் கூடுதலான மருத்துவமனைகளை இணைக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஆக.6) அடையாறு பிஎஸ்என்எல் அலுவலகம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு (என்சிசிபிஏ) சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் மோகன், சி.கே. நரசிம்மன், ராஜசேகர் உள்ளிட்டோர் பேசினர். இதை தொடர்ந்து சிஜிஎச்எஸ் சென்னை மண்டல கூடுதல் இயக்குநரிடம் மனு அளித்தனர்.