districts

img

அம்மா பரிசு பெட்டகத்தை பணமாக வழங்க சுகாதார செவிலியர் சங்கம் கோரிக்கை

கடலூர், டிச. 12- கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் அம்மா பரிசு பெட்டகத்திற்கான செலவை ரொக்கமாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் மாநிலத் தலைவர் ஆர்.இந்திரா தலைமையில் நடை பெற்றது. மாநில பொதுச்செயலர் பி.நீலா, பொருளர் பி.பாத்திமாமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் என்.காசிநாதன், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் ஜெ.ராமதாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  இந்த கூட்டத்தில், வரும் பிப்.6 ஆம் தேதியன்று கும்பகோணத்தில் சங்கத்தின் 6 ஆவது மாநில மாநாட்டை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், பல்வேறு பிரச்னைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் செயற்குழு குறித்து மாநிலத் தலைவர் ஆர்.இந்திரா செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தடுப்புப்பணியில் ஈடு பட்டுள்ள மருத்துவர்கள், செவி லியர்களை முன்களப் பணியாளர்க ளாக அறிவித்தது, வெளிப்படைத் தன்மையுடன் செவிலியர்களுக்கான கலந்தாய்வை நடத்தியதற்கு முதல்வரு பாராட்டுத் தெரிவிக்கிறோம். பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக அமைப்பதாக உறுதியளிக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.  

தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த கட்ட மைப்பினை சீர்குலைக்கும் வகையில் துணை சுகாதார நிலையங்களில் புதியதாக தேர்ந்தெடுத்த செவிலி யர்களை நியமிக்கக் கூடாது. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செவி லியர் பயிற்சி பெற்று பணிக்காக காத்திருக்கும் நிலையில் பயிற்சி பெற்ற வர்கள் இல்லையென கூறுவதை ஏற்க முடியாது. எனவே, அவர்களுக்கு வேறு இடங்களில் பணி வழங்க வேண்டும். செவிலியர்களுக்கு மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும். மாநிலத்தில் சுமார் ஆயிரம் செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட படிகளை மத்திய அரசு வழங்குவதால் இப்பணி யிடங்களை நிரப்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இடிந்து விழும் நிலையில் உள்ள துணை சுகாதார நிலையங்களை உடனடியாக சீரமைப்பதோடு, மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமைக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் வகையில் அம்மா பரிசு பெட்டகம் ரூ.4 ஆயிரம் மதிப்பில் வழங்கப்படுகிறது. ஆனால், 10 தாய்மார்களில் ஒருவருக்கு மட்டுமே இந்த பெட்டகம் வழங்கப்படுவதால் பல்வேறு சிரமங்களை செவிலியர்கள் எதிர்கொள்கின்றனர். எனவே, பரிசு பெட்டகத்திற்குப் பதிலாக ரூ.4 ஆயிரத்தை ரொக்கமாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;