காஞ்சிபுரம், மார்ச்.4 – காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க நீதிமன்றம் புதுப்பிக் கப்பட்டு திறக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 1901 ஆண்டு முதல் செயல்பட்டு வந்த முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க வழக்குகள் தீர்வு கண்டு மக்கள் மனதில் நின்ற ஒரு நீதிமன்றமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் பழம் பெருமை வாய்ந்த அந்த நீதிமன்ற கட்டிடம் சிதலமடைந்து பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தது இந்நிலையில், இந்த சிறப்பு மிக்க நீதிமன்றத்தை பழமை மாறா மல் அதே பொலிவுடன் சீரமைக்க வேண்டும் என வழக்கறிஞர்களின் கோரிக்கை வைத்த தின் அடிப்படையில் மீண்டும் புதுப்பிக்கப் பட்டது. 123 ஆண்டுகள் பழமையான அந்த நீதிமன்றத்தின் திறப்பு விழா ஞாயிறன்று நடைப்பெற்றது. புதுப்பிக்கப்பட்ட மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் ரிப்பன் வெட்டி மீண்டும் பயன் பாட்டுக்கு திறந்து வைத்தார். இவ்விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மற்றும் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உள்ளிட்ட பல வழக்கறிஞர் கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி செம்மல் இருக்கையில் அமர்ந்து வழக்குப் பணியை தொடர்ந்தார்.