சென்னை,டிச.3- பெஞ்சல் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊத்தங் கரை மற்றும் போச்சம்பள்ளி மக்களுக்கு உடன டியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. பெஞ்சல் புயல் தாக்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மற்றும் போச்சம் பள்ளி வட்டங்களில் இரண்டு நாட்கள் விடிய, விடிய பெய்த கனமழையால், ஏரிகள் அனைத்தும் நிரம்பி உபரி நீர் வெளியேறிய தால் வெள்ளக்காடானது. உபரி நீர் வெளியேற்ற ப்பட்டதால் நகருக்குள் புகுந்தது. ஊத்தங்கரை பேருந்து நிலையம் எதிரே உள்ள பரசனேரி நிரம்பி வெளியேறிய உபரி நீரால், அண்ணா நகர், காமராஜர் நகர், ஊராட்சி அலுவலக சாலை குடியிருப்பு பகுதி களில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள் ளதால், பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினர். ஏரியின் கரையில் உள்ள ஊத்தங்கரை - திருப்பத்தூர் சாலையில், மின் கம்பங்களும் கடுமையாக பழுதடைந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். நீரில் மூழ்கிய காவல் நிலையம் போச்சம்பள்ளி வட்டத்தில் கோணணூர் ஏரி நிரம்பி வெளியேறிய உபரி நீரால் போச்சம் பள்ளி பகுதியில் கடை வீதிகளும் நீரால் சூழப்பட்டது அதேபோல் போச்சம்பள்ளி தரும புரி - திருப்பத்தூர் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏரியின் உபரி நீர் போச்சம்பள்ளி காவல் நிலையம், 4 சாலையில் உள்ள கடைகளுக்கு புகுந்துள்ளது. தருமபுரி, திருப்பத்தூர், சிப்காட் செல்லும் 3 சாலைகளில் தற்காலிகமாக போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், காட்டாகரம் பெரிய ஏரி, கங்கா வரம் ஏரிகள் நிரம்பி வெளியேறிய உபரி நீரால், அப்பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக,ஆறு கடந்து செல்லும் பாதையில் உள்ள சுமார் 25 ஏக்கர் விளை நிலங்களில் நெற்பயிர்கள் நாசமானது. ஊத்தங்கரையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் தீயணைப்புத் துறையினர், மின்சார வாரியத்தினர், காவல்துறையினர் மீட்கும் பணியில் ஈடு பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதை அகற்றும் பணியில், நெடுஞ்சாலை மற்றும் பல்வேறு இடங்களில் வேருடன் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகளிலும் சம்பந்தப்பட்ட துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சிபிஎம் குழு ஆய்வு இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநிலக்குழு உறுப்பினருமான பி.டில்லிபாபு தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்டச் செய லாளர் சி.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் நஞ்சுண்டன், மகாலிங்கம், ஊத்தங் கரை வட்டச் செயலாளர் ஆர்.சபாபதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சீனிவாசன், கவிமனிதேவி ஆகியோர் கொண்ட குழு பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். இடிந்து விழுந்த வீடு ஊத்தங்கரை வட்டாரத்தில் சுமார் 250 ஏக்கர் அளவுக்கு நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. ஊத்தங்கரை பகுதி நாரசம் பட்டியில் 1988 இல் அரசு கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு ஓட்டு வீடுகளில் இரண்டு வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள் ளது. பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் விட்டு சேதம் அடைந்துள்ளன. ஊத்தங்கரை கல்லாவி பகுதியில் ஐந்து வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாவக்கல் பகுதியில் ஐந்து வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. போச்சம்பள்ளி பகுதியில் புலியூர் ஏரி உடைந்து குடியுருப்புகளில் மழைநீர் புகுந்த தால் 52 பன்னியாண்டிகள் குடும்பத்தினர் சமத்துவ கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாகோஜனஹள்ளி பேரூராட்சியில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மழை நீர் பூந்துள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. சிங்காரப்பேட்டை பகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சமத்துவ கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போச்சம்பள்ளி சமத்துவபுரத்தில் முற்றிலும் நீர் நிரம்பியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. அரசம்பட்டி பகுதியில் ஒரு வீடு சேதம் அடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஊத்தங் கரை, போச்சம்பள்ளி பகுதிகளில் மக்களி னுடைய வாழ்வாதாரம் என்பது பாதிக்கப் பட்டுள்ளது வரலாறு காணாத மழையால் எங்கும் கடல் போல் காட்சியளிக்கிறது. துணை முதல்வருக்கு பாராட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உடனடியாக களத்திற்கு வந்து ஆய்வு செய்தது பாராட்டுக்குரியது. பாதிப்புக்குள்ளான 250 ஏக்கர் நெல் பயிர், 15 வாகனங்கள், 46 ஆடுகள், 16,000 கோழிகள், 16 மாடுகள் இந்த மழையால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக தகவல் கிடைத்துள்ளது. இடிந்த வீடுகளை உடனடியாக கட்டித் தரவேண்டும், பாதிக்கப்பட்ட வீடுகளை பரா மரிப்பு செய்து, முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் பாதிப்புக்குள்ளான அனைத்து மக்களுக்கும் உரிய நிவாரணங் களை உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.